ஆர்யா படத்துக்கு ரஜினி பட தலைப்பு

Arya-gets-Rajinikanth-Movie-Title-Thanikaattuபுதிய படங்களுக்கு பழைய படத் தலைப்புகளை வைப்பது அதிகரித்து வருகிறது. அதுவும் சமீபகாலமாக ரஜினி பட தலைப்புகள் புதிய தமிழ் படங்களுக்கு சூட்டப்படுகின்றன.

தனுஷ் நடித்துள்ள பல படங்களுக்கு ரஜினி பட தலைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. ‘பில்லா’ பட தலைப்பில் அஜித் நடித்தார்.

ரஜினியின் ‘போக்கிரி ராஜா’ பட தலைப்பு ஜீவா– ஹன்சிகா நடிப்பில் வெளியாக இருக்கும் படத்துக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இப்போது ஆர்யா நடிக்கும் புதிய படத்துக்கு ‘தனிக்காட்டு ராஜா’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

ரஜினி நடிப்பில் 1982–ல் வெளியான ‘தனிக்காட்டு ராஜா’ படத்தை வி.சி.குகநாதன் இயக்கினார். இதில் ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா, ஜெய்சங்கர் உள்பட பலர் நடித்து இருந்தனர். 34 வருடங்களுக்கு பிறகு ஆர்யா – கேத்தரின் தெரசா நடிக்கும் படத்துக்கு இந்த பெயரை வைத்திருக்கிறார்கள்.

பெயரை தவிர அந்த படத்துக்கும் இந்த படத்துக்கும் வேறு சம்பந்தம் எதுவும் இல்லை. ஆர்யா நடிக்கும் ‘தனிக்காட்டு ராஜா’ படத்தை ‘மஞ்சப்பை’ படத்தை இயக்கிய ராகவன் இயக்குகிறார்.

ஆர்யா காட்டுவாசியாகவும், கேத்தரின் தெரசா காட்டுவாசி பெண்ணாகவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries