ஆஸ்கர் விழாவில் கலக்கிய பிரியங்கா சோப்ரா

priyanka-88–வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடந்தது. இந்த விழாவில் விருது வழங்குவோர் பட்டியலில் இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும் இடம் பெற்றிருந்தார்.

விழாவில் கலைஞர்களுடன் சேர்ந்து விருது வழங்கும் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான பிரியங்கா சோப்ரா வெள்ளைநிற மெல்லிய உடை அணிந்து வந்தார். இது காண்பவர்களை கவரும் விதமாக இருந்தது.

அவர் இடுப்பில் கட்டியிருந்த ‘பெல்ட்’ அந்த உடைக்கு மேலும் அழகு சேர்த்தது. இடுப்பில் கைவைத்தபடி சிவப்பு கம்பளத்தில் அவர் புன்னகையுடன் எழிலாக நடந்து வந்து அசத்தினார். அப்போது கேமராக்கள் அவரை போட்டி போட்டு படம் பிடித்தன.

விழாவில் சிறந்த படத்தொகுப்புக்கான விருது ‘மேட்மேக்ஸ் பியூரி ரோப்’ படத்துக்காக பாலிவுட் கலைஞர் சிக்செல் என்பவருக்கு வழங்கப்பட்டது. இதை பிரியங்கா சோப்ரா வழங்கினார்.

அவர் கைகளில் 3 வைர மோதிரங்களும், காதுகளில் வைரத் தோடுகளையும் அணிந்திருந்தார். இதன் மொத்த மதிப்பு மட்டும் சுமார் ரூ.80 லட்சம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்திய பிரதிநிதியாக முதன் முதலில் ஆஸ்கார் பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்ற பிரியங்கா சோப்ரா, அவரது நடை, உடை, பாவனையாலும், புன்னகையாலும் அணிந்திருந்த அழகிய நகைகளாலும் அனைவரையும் கவர்ந்து விட்டார் என்று ஏராளமானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆஸ்கார் விருது பெற்றவர்கள் குறித்து கமல்ஹாசன் தனது கருத்தை டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். பிரியங்கா சோப்ரா பற்றி கூறியுள்ள அவர், ‘‘பிரியங்கா சோப்ரா மிகவும் அழகாகவும், நம்பிக்கையுடனும் காணப்பட்டார்’’ என்று கூறி இருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries