ரொமேனியாவில் சூர்யா – அனுஷ்கா ரொமான்ஸ்

Surya-Anushka-photos-15சூர்யா தற்போது ஹரியுடன் மீண்டும் இணைந்து ‘எஸ்.3’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்கி, சென்னை, மதுரை, காரைக்குடி ஆகிய ஊர்களில் நடந்து முடிந்துள்ளது.

தற்போது, அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் ரொமேனியா நாட்டுக்கு செல்லவிருக்கிறார்களாம். இங்கு சூர்யா, அனுஷ்கா சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளை படமாக்கவிருக்கிறார்கள். இப்பாடலை சமீபத்தில்தான் ஹாரிஸ் ஜெயராஜ் தனது இசையில் சுவேதா மோகன், ஹரிஷ் ராகவேந்திரா ஆகியோரின் குரலில் ஒலிப்பதிவு செய்துள்ளார்.

ரொமேனியாவில் படப்பிடிப்பு நடத்திவிட்டு, அடுத்தக்கட்டமாக ஏப்ரலில் மலேசியாவுக்கு படக்குழு பயணமாகவிருக்கிறார்கள். இங்கு வில்லன்களுடன் சூர்யா மோதும் சில காட்சிகளை படமாக்கப் போவதாக கூறப்படுகிறது. மலேசியா படப்பிடிப்புக்கு பிறகு கோவா, சென்னை, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

‘எஸ்.3’ படத்தை அக்டோபர் 7-ந் தேதி ஆயுத பூஜையையொட்டி வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் மட்டுமில்லாது தெலுங்கிலும் இப்படத்தை வெளியிடவுள்ளனர். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் வில்லன் யார் என்பது இதுவரை சஸ்பென்சாகவே உள்ளது. விரைவில், யார் வில்லன் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என தெரிகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries