முதல் முறையாக 6 நிமிட காட்சியை ரிலீஸ் செய்யும் ராஜதந்திரம் படக்குழுவினர்

12-1426156476-rajathanthiramreviewதமிழ் திரையுலகில் தற்போது படங்கள் வெற்றி பெற்றால் அவற்றின் இரண்டாம் பாகங்கள் உருவாக்க ஆர்வம் காண்பித்து வருகின்றனர். ‘எந்திரன்’, ‘பாகுபலி’, ‘கோ’, ‘டார்லிங்’, ஆகிய படங்கள் இரண்டாம் பாகங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்ற ராஜதந்திரம் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் படமாக்கப்பட இருக்கிறது.

இதற்கு முன்னோட்டமாக இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ஆறு நிமிட வீடியோ ஒன்றை மார்ச் 13ம் தேதி இணையதளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர். இது தமிழ் திரையுலகில் முதல் முறையாக என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு வெளியான ராஜதந்திரம் படத்தில் வீரபாகு, ரெஜினா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். திரில்லிங் படமான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் அதே நட்சத்திரங்களுடன் ஜூன் அல்லது ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries