மீண்டும் சிம்புடன் இணைவதில் பிரச்சினை இல்லை: அனிருத்

404179-simbu-and-anirudhசிம்பு பாடிய ‘பீப்’ பாடல் சமீபத்தில் பெரும் விவகாரமாக உருவெடுத்தது. இந்த பாடலுக்கு அனிருத் இசை அமைத்ததாக முதலில் கூறப்பட்டது. எனவே, சிம்பு, அனிருத் இருவருக்கும் எதிராக போராட்டங்கள் நடந்தன. பல வழக்குகளும் தொடரப்பட்டன.

‘எனக்கும் சிம்புவின் ‘பீப்’ பாடலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை’ என்று அனிருத் அறிக்கை வெளியிட்டார். கோவை போலீஸ் நிலையத்தில் ஆஜர் ஆகி விளக்கமும் அளித்தார்.

கோர்ட்டு, வழக்கு என்று பல்வேறு பிரச்சினைகளை சந்தித்த சிம்புவும் சமீபத்தில் போலீஸ் நிலையத்தில் ஆஜர் ஆகி, ‘இந்த பாடலுக்கு அனிருத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. நானே முழு பொறுப்பு என்று கூறினார்.

மீண்டும் இருவரும் இணைந்து பணிபுரிவீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அனிருத் அளித்த பதில்…

‘பீப்’ பாடல் சிறிய விஷயம். தேவை இல்லாமல் அது பெரிதாக்கப்பட்டு விட்டது. அந்த பாடலுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கோவை போலீஸ் நிலையத்தில் விளக்க கடிதம் கொடுத்து விட்டேன்.

மீண்டும் நான் ஏன் சிம்புடன் இணைந்து பணியாற்றாமல் இருக்க வேண்டும். உண்மையை சொன்னால் நாங்கள் இரண்டுபேரும் இணைந்து பணிபுரிந்ததால் என்ன கொடுக்கப் போகிறோம் என்று தெரிந்து கொள்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். எனவே இணைந்து பணியாற்றுவதில் எந்த பிரச்சினையும் இருக்காது’. – அனிருத்

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries