நான் அஜித் ரசிகை: சாதனா டைட்டஸ்

Pichaikkaran-Movie-Gallery-5முன்பு திரைப்பட நாயகிகளிடம் உங்களுக்கு பிடித்தமான ஹீரோ யாரு என்று கேட்டால் பொதுவாக மலுப்பலான பதில்களைத்தான் சொல்வார்கள். அப்போது நிலைமை மாறிவிட்டது.

புதிதாக வரும் நடிகைகளிடம் உங்களுக்குப் பிடித்தமான நடிகர் யார்? நீங்கள் யாருடைய ரசிகை என்று கேள்வி கேட்டால் உடனே தங்களுக்குப் பிடித்தமான நடிகர் யார் என்பதை ‘பட்’ என்று சொல்லி விடுகிறார்கள்.

குறிப்பிட்ட நாயகனுடன் நடிக்கும் நாயகிகளிடம் கேட்டால் தான் நடிக்கும் படத்தின் நாயகன் பெயரை கூறுகிறார்கள். எந்த பிரபல நாயகனுடனும் நடிக்காதவர்களிடம் கேட்டால் பெரும்பாலானவர்கள் விஜய், அஜீத் பெயரைத்தான் சொல்கிறார்கள்.

யாருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்? என்ற கேள்வியை கேட்டாலும் இந்த இரண்டு ஹீரோக்களின் பெயர்களைத்தான் கூறுகிறார்கள்.

பிச்சைக்காரன் படத்தில் கேரளத்தில் இருந்து வந்துள்ள சாதனா டைட்டஸ் நடித்து இருக்கிறார். இவரிடம் பிடித்தமான நடிகர் பற்றி கேட்ட போது, ‘‘நான் அஜித்தின் தீவிரமான ரசிகை. அவர் நடித்துள்ள படங்களை தவறாமல் பார்த்து விடுவேன்.

தமிழில் நான் நடிக்க தொடங்கிய பிறகு எப்படியாவது அவருடன் ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் என்பது எனது ஆசை என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries