பேய் படத்தில் நடித்தது சவாலான அனுபவமாக இருந்தது: ஸ்ரீகாந்த்

Sowkarpetai-Movie-Stills-4திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் ‘சவுகார் பேட்டை’ என்ற பேய் படத்தில் ஸ்ரீகாந்த்-ராய்லட்சுமி ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஸ்ரீகாந்த் அளித்த பேட்டி வருமாறு:-

‘‘எனது நடிப்பில் வித்தியாசம் வேண்டும் என்பதற்காகத்தான் பேய் படமான ‘சவுகார் பேட்டையில் நடித்தேன். இது பேய் படம் என்றாலும் அதிரடி, நகைச்சுவை உள்ளிட்ட அனைத்து ஜனரஞ்சகமான விஷயங்களும் உண்டு. யதார்த்தம் வேண்டும் என்பதற்காக மயானங்களில் படப்பிடிப்பை நடத்தினர்.

ஒரு பக்கம் பிணம் எரிந்து கொண்டு இருக்கும் இன்னொரு பக்கம் படப்பிடிப்பு நடக்கும். இது கஷ்டமான சவாலான அனுபவமாக இருந்தது. இதில் முதல் தடவையாக இரட்டை வேடத்தில் நடித்தேன். சென்னை இளைஞனாகவும் மந்திரவாதியாகவும் இரண்டு வேடங்களும் மாறுபட்டவை.

ஒருமணி நேரம் ‘மேக்கப்’ போட்டு நடித்தேன். எனக்கு ஜோடியாக வந்த ராய்லட்சுமி இதற்கு முன்பு பேய் படங்களில் நடித்த அனுபவம் உள்ளவர். சண்டைக்காட்சிகளில் அவர் ‘டூப்’ போடாமல் நடித்தார். அப்போது அவருக்கு அடிகூட பட்டது.

அதை பொருட்படுத்தாமல் நடித்துக்கொடுத்தார். அவர் அர்ப்பணிப்புள்ள நடிகை. படப்பிடிப்பில் ராய்லட்சுமி பேய்க்கதைகள் சொல்லி உதவி இயக்குனர்களை பயமுறுத்தினார். 45 நாட்களில் டைரக்டர் வடிவுடையான் படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டார்.

எனக்கு பேய் பயம் உண்டு. சிறு வயதில் இருந்தே இருட்டைப் பார்த்து பயப்படுவேன். எட்டாவது வகுப்பு படிப்பது வரை இந்த பயம் இருந்தது.

அதன்பிறகு தைரியமான ஆளாக மாற திகில் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். என்னதான் தைரியமான ஆளாக காட்டிக்கொண்டாலும் மனதின் ஒரு மூலையில் பேய் பயம் இருக்கத்தான் செய்கிறது’’.

இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries