தேர்தலில் போட்டியிட விரும்பும் காயத்ரி ரகுராம்

mfs_Gayathri-Raghuram_newsபிரபுதேவா நடித்த ‘சார்லி சாப்ளின்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் காயத்ரி ரகுராம். இப்படத்திற்குப் பிறகு சில படங்களில் மட்டுமே நடித்த இவர் தற்போது பிரபல நடன இயக்குனாராக இருந்து வருகிறார்.

சமீபத்தில் பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி நடித்த ‘தாரை தப்பட்டை’ படத்தில் காயத்ரி ரகுராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், இவர் தற்போது அரசியலில் குதித்துள்ளார். வரும் தேர்தலில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட மனு கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சட்ட மன்றத் தேர்தலில் பா.ஜ.க மகத்தான வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online