கபாலி இசையமைப்பாளருடன் இணைந்த அனிருத்

Anirudh-Santhosh-Narayananசந்தோஷ் நாராயணன் தற்போது ரஜினி நடித்து வரும் ‘கபாலி’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்திற்காக மிகுந்த சிரத்தையுடன் பணியாற்றி வரும் சந்தோஷ் நாராயணன், உதயநிதி நடிக்கும் ‘மனிதன்’ என்ற படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை அனிருத் பாடியிருக்கிறாராம். ‘மனிதன்’ படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், இந்த செய்தி தற்போதுதான் வெளிவந்திருக்கிறது.

சமீபகாலமாக அனிருத் பாடும் பாடல்கள் எல்லாம் பெரிய அளவில் ஹிட்டாகி வருவதால் இப்படத்திலும் அவர் ஒரு பாடலை பாடியிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இந்த பாடலும் மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.

‘மனிதன்’ படம் இந்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்ற ‘ஜாலி எல்.எல்.பி.’ படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் உதயநிதி ஹீரோவாகவும், ஹன்சிகா ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்கள். இவர்கள் தவிர பிரகாஷ் ராஜ், ராதாரவி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை அஹமது இயக்கியுள்ளார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் உதயநிதியே தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries