தேர்தல் களத்தில் அஞ்சலி

Anjali-1சித்தியுடனான பிரச்சினைக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார் அஞ்சலி. வரிசையாக படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள அஞ்சலி, தேர்தல் களத்திலும் குதிக்கவுள்ளாரா? என்ற செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும்.

அவர் உண்மையான தேர்தல் களத்தில் இறங்கவில்லை. விமலுடன் இவர் நடித்து வரும் ‘மாப்ள சிங்கம்’ படத்தில்தான் விமலுக்கு எதிராக இவரும் தேர்தல் களத்தில் இறங்குகிறாராம்.

‘மாப்ள சிங்கம்’ படத்தை ராஜசேகர் இயக்கியுள்ளார். விமல், அஞ்சலி, சூரி, காளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற மார்ச் 11-ந் தேதி வெளிவரவிருக்கிறது.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வக்கீலான அஞ்சலி, விமலுக்கு எதிராக தேர்தல் களத்தில் குதிப்பதுபோன்ற காட்சி ஒன்று இடம்பெறுகிறதாம். இதில், அஞ்சலி வீர வசனங்கள் எல்லாம் பேசி அசத்தியுள்ளாராம்.

அதுமட்டுமில்லாமல், ஜனரஞ்சகமாக உருவாகியுள்ள இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மிகவும் கவரும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இப்படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் சார்பில் பி.மதன் தயாரித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online