மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக மூன்று நாயகிகள் பரிசீலனை

mahesh-babu_630x450_81440064359ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சோனாக்ஷி சின்ஹாவை வைத்து இந்தியில் ‘அகிரா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

இப்படத்தின் கதாநாயகனாக மகேஷ் பாபு தேர்வாகியுள்ளார். இந்நிலையில், கதாநாயகியாக இரண்டு மொழிகளிலும் நன்கு அறிமுகமான கதாநாயகியை தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, கீர்த்தி சுரேஷ், பரினிதி சோப்ரா, சாய் பல்லவி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். மலையாளத்தில் வெளிவந்த ‘பிரேமம்’ படத்தின் மூலம் அனைத்து மொழிகளிலும் நன்கு அறிமுகமானவர் சாய் பல்லவி. அதேபோல், கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். பரினிதி சோப்ரா இந்தியில் மட்டுமே நன்கு பரிச்சயமானவர்.

இதனால், கீர்த்தி சுரேஷ் அல்லது சாய் பல்லவி ஆகியோரில் ஒருவருக்கு மட்டுமே ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online