சிவகார்த்திகேயனின் ரெமோ தலைப்பின் மர்மம்

Sivakarthikeyan's-next-is-Remoசிவகார்த்திகேயன் தற்போது ‘ரெமோ’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் பல்வேறு கெட்டப்புகளில் வருகிறார். இதற்காக பிரபல ஹாலிவுட் மேக்கப் கலைஞர் சீன் பூட் இப்படத்தில் பணியாற்றி வருகிறார்.

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் உருவாகும் இப்படத்தின் தலைப்பு ‘ரெமோ’ என்று அறிவித்ததுமே, இதில் ஏதாவது மர்மம் இருக்குமோ? படத்துக்கும் தலைப்புக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ? என பல்வேறு தரப்பிலும் இருந்து சந்தேகங்கள் எழுந்தது.

தற்போது, அந்த மர்மம் விலகியுள்ளது. அதாவது, இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஆண் மற்றும் பெண் கெட்டப்புகளில் நடிக்கவிருக்கிறாராம்.

இதில் ஆண் வேடத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயனின் பெயர் ‘ரெ’ என்று தொடங்குமாம். பெண் கெட்டப்பில் வரும் சிவகார்த்திகேயனின் பெயர் ‘மோ’ என்று தொடங்குமாம். இதனால்தான் படத்திற்கு ‘ரெமோ’ என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர, மேலும் பல கெட்டப்புகளில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ரசூல் பூக்குட்டி சவுண்ட் என்ஜீனியராகவும், அனிருத் இசையமைப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர். ஆர்.டி.ராஜா இப்படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries