தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் சிம்பு

Simbuசிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு வெளிவந்த படம் ‘வாலு’. இப்படத்தை விஜய்சந்தர் இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிம்புவும்-விஜய் சந்தரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளது அனைவருக்கும் தெரிந்ததே.

தற்போது இப்படம் தெலுங்கு படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்.,- காஜல் அகவர்வால் நடிப்பில் வெளிவந்து வெற்றிநடை போட்ட ‘டெம்பர்’ படத்தின் ரீமேக்கில்தான் சிம்பு நடிப்பதாக பேச்சு அடிபடுகிறது. இப்படத்தை தெலுங்கில் பிரபல இயக்குனர் பூரி ஜெகந்நாத் இயக்கியிருந்தார். தற்போது தமிழில் விஜய் சந்தர் இயக்கப் போகிறார்.

சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் முடிந்தபிறகு விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தில் நடிப்பார் என தெரிகிறது.

மேலும், இப்படத்திற்கான நாயகி மற்றும் பிற நடிகர்கள் தேடும் படலமும் நடைபெற்று வருகிறது. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என தெரிகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online