எனது துணையை நான் தேர்ந்தெடுப்பேன்: சுஸ்மிதா சென்

M_Id_415764_sushmita-senஇந்தி நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஸ்மிதா சென் வயது ஏறிக் கொண்டே இருக்கிறது. என்றாலும், ‘எனக்கு பொருத்தமான துணையை நான் தேர்ந்தெடுப்பேன்’ என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

சுஸ்மிதாசென் இது குறித்து அளித்த பேட்டி… ‘‘என்னைப் போன்ற நடிகைகளான பிரீத்தி ஜிந்தாவும், ஊர்மிளா மாண்டேகரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

பிரீத்தி ஜிந்தாவுக்கு ‘டுவிட்டரில்’ வாழ்த்து தெரிவித்தேன். அவர் ஒரு அற்புதமான நடிகை. அவர் திருமணம் செய்து கொண்டதாக வந்த தகவல் அறிந்து மிகவும் மகிழ்ந்தேன்.

ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்கிறார்கள். அதை அறிவிக்க பல நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள். எனக்கு இன்னும் வயது 20 என்றே நினைக்கிறேன். எனக்கு பொருத்தமான துணையை நான் தேர்ந்தெடுப்பேன்.

உறவுகளை காலம் முடிவு செய்வது இல்லை. சரியான புரிதல் ஏற்படும் போது அது நடக்கிறது. அதுபோல் எனக்கும் ஏற்பட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன்” என்றார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries