ஜி.வி.பிரகாஷின் பென்சிலுக்கு நாள் குறிச்சாச்சு

newsKeh0Kcine_gallery_111416120056‘டார்லிங்’ படம் மூலம் நடிகராக அறிமுக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. ‘டார்லிங்’ படத்திற்குப் பிறகு இவர் நடிப்பில் வெளியான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படமும் சூப்பர் ஹிட்டானது.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘டார்லிங்’ படம் வெளிவந்தாலும் இவர் முதலில் நடிக்க ஆரம்பித்த படம் ‘பென்சில்’. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து சில காரணங்களால் வெளியாகாமல் ரிலீஸ் தேதி அறிவித்து பின்னர் தள்ளி போய் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இப்படம் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அனேகமாக இப்படம் மார்ச் 25ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருக்கிறார்.

மேலும் விடிவி கணேஷ், ஊர்வசி, டி.பி.கஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை மணிநாகராஜ் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries