தனுஷ் நாயகிக்கு ஜாக்கி சான் கொடுத்த பரிசு

amyra_dastur_and_jackie_chan‘அனேகன்’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமைரா நடித்திருந்தார். கே.வி.ஆனந்த் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திற்குப் பிறகு அமைராவுக்கு தமிழில் வாய்ப்பு ஏதும் அமையவில்லை.

இந்தி நடிகையான அமைரா தஸ்தூர் தற்போது இந்தியா-சீனா கூட்டு தயாரிப்பில் உருவாகி வரும் ‘குங்பூ யோகா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜாக்கி சான் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இவருக்கு ஜோடியாக அமைரா நடித்து வருகிறார். தற்போது இதன் படப்பிடிப்புகள் கடும் பனிப்பிரதேசத்தில் நடந்து வருகிறது. சீன இயக்குனர் ஸ்டேன்லி டோங் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நடிப்பதற்கு மூன்று மாதங்கள் முன் ஜாக்கி சான் குழுவில் கராத்தே பயிற்சி எடுத்துக் கொண்டார் அமைரா. தன்னிடம் சிறந்த முறையில் பயிற்சி எடுத்துக் கொள்பவர்களுக்கு ஜாக்கி சான் விலை உயர்ந்த பொருளை பரிசளிப்பது வழக்கம்.

அந்த வகையில் தன் குழுவினருக்காக தானே வடிவமைத்த விலை உயர்ந்த, குளிருக்கு அணியும் ஜாக்கெட் ஒன்றை அமைராவிக்கு பரிசளித்திருக்கிறார். இதனை சந்தோஷமாக பெற்றுக் கொண்ட அமைரா அதை பெரிய பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online