குறும்பட இயக்குனர்கள் கையில்தான் வருங்கால சினிமா இருக்கும்: சற்குணம்

sargunam-directorசென்னையில் ‘சப்வே’, ‘நான்படிச்ச ஸ்கூல் அப்படி’ என இரு குறும்படங்கள் இன்று திரையிடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் குறும்படங்களின் படக்குழுவினருடன், இயக்குனர் சற்குணமும் கலந்துக் கொண்டார்.

இப்படங்களின் திரையீட்டுக்குப் பின்பு இயக்குனர் சற்குணம் பேசும் போது, ‘இந்த இரண்டு குறும்படங்களையும் பார்த்தேன். இரண்டு படங்களுமே வெவ்வேறு வகையில் இருந்தன. நன்றாகவும் தரமாகவும் இருந்தன. இன்று குறும்படங்கள் கவனிக்கப் படுகின்றன.

இன்றைய தமிழ் சினிமா குறும்பட இயக்குனர்கள் கையில் போய்க்கொண்டு இருக்கிறது. குறும்பட இயக்குனர்கள் தான் தமிழ்ச் சினிமாவில் இப்போது தரமான படங்களின் இயக்குனர்களாக, முக்கியமான படங்களின் இயக்குனர்களாக அறியப்படுகிறார்கள்.

முன்பெல்லாம் ஊரிலிருந்து இங்கு வந்துதான் சினிமாவைக் கற்றுக் கொள்வார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. இப்போதெல்லாம் ஊரில் இருக்கும் போதே, இங்கே வரும் போதே ஒரு குறும்படம் எடுத்துவிட்டு நேரே தயாரிப்பாளரிடம், நானும் ஒரு சினிமா எடுத்திருக்கிறேன் என்று காட்டிவிட்டு வாய்ப்பு கேட்கிறார்கள்.

வருங்கால தமிழ்ச் சினிமா இனி குறும்பட இயக்குனர்கள் கையில்தான் இருக்கும் என்பதை நான் நம்பிக்கையுடன்
கூறுவேன்’ என்று கூறி படக்குழுவினரை வாழ்த்தியதுடன் தொழில்நுட்பக் கலைஞர்களின் பெற்றோரையும் மேடையில் ஏற்றி கௌரவப் படுத்தினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online