வித்தியாசமான கெட்டப்பில் நடிக்க ஆசைப்படும் சிபிராஜ்

sibiraj-in-pokkiri-raja-145450147630-02-1456900363ஜீவா-ஹன்சிகா-சிபிராஜ் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘போக்கிரி ராஜா’. இப்படத்தில் கூலிங் கிளாஸ் குணா என்ற கதாபாத்திரத்தில் படம் முழுக்க கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு, கேரளா வேஷ்டியுடன் வித்தியாசமான வேடத்தில் கலக்கியிருந்தார் சிபிராஜ்.

சிபிராஜின் இந்த கெட்டப் அவரது ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளதாம். ஹோட்டல், பார்லர், காம்ப்ளக்ஸ என சிபிராஜ் எங்கு சென்றாலும் அவரை கூலிங் கிளாஸ் குணா என்றே ரசிகர்கள் அழைக்கிறார்களாம்.

ரசிகர்களின் பட்டப் பெயரால் மகிழ்ச்சி அடைந்தாலும், வெளியே செல்லும்போதெல்லாம் வித்தியாசமான கெட்டப்புடனேயே சுற்றி வருகிறாராம் சிபி ராஜ்.

கூலிங் கிளாஸ் குணா கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதால் தொடர்ந்து இதேபோன்று வித்தியாசமான கதாபாத்திரம் மற்றும் கெட்டப்பில் நடிக்க சிபிராஜ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ‘போக்கிரி ராஜா’ படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியிருந்தார். டி.இமான் இசையமைத்திருந்தார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online