கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி?

Vijay-sethupathi-KV-anand-87661ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கடைசியாக ‘அனேகன்’ படம் வெளியானது. இதில் தனுஷ் கதாநாயகனாகவும், அமைரா தஸ்தூர் கதாநாயகியாகவும் நடித்திருந்தார்கள்.

இப்படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் அஜித்தை வைத்து இயக்குவதாகவும், விஜய்யை வைத்து இயக்குவதாகவும், பின்னர் ஆர்யா, ஜீவாவை வைத்து இயக்குவதாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால் இந்த செய்திகள் உறுதியாக நிலையில், தற்போது புதியதாக விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

விஜய் சேதுபதி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இருப்பினும் கே.வி.ஆனந்த் கூறிய கதை அவரை கவர்ந்ததாகவும், இந்த படத்தில் நடிக்க அவர் உறுதியளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க முன்வந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. விரைவில் இப்படம் குறித்த முழு விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries