அஜித் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஜி.வி.பிரகாஷ் விருந்து

imgajith-gv-prakashஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது ‘எனக்கு இன்னோரு பேர் இருக்கு’ படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஜி.வி.க்கு ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார். ‘டார்லிங்’ பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் தலைப்பே ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதற்காக இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் சில ரிஸ்கான விஷயங்களும் செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஜி.வி.பிரகாஷ் முதன்முறையாக இந்த படத்தில் சண்டை காட்சிகளில் எல்லாம் நடித்துள்ளாராம்.

படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், விரைவில் டிரைலரையும், ஆடியோவையும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து, படத்தை அஜித் பிறந்தநாளான மே 1-ந் தேதி வெளியிட தயாரிப்பாளர் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries