காட்டுவாசியாக நடிக்கும் ஆர்யா

Irandam-Ulagam-ஆர்யா தற்போது ‘மஞ்சப்பை’ இயக்குனர் ராகவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா நடிக்கவிருக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்திற்கு ‘தனிக்காட்டு ராஜா’ என்று ரஜினி படத் தலைப்பு வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், தயாரிப்பு தரப்பிலிருந்து இந்த செய்திக்கு மறுப்பு வந்துள்ளது. எனவே, இன்னும் இப்படத்துக்கு தலைப்பு வைக்கப்படாமலேயே இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தில் ஆர்யா கதாபாத்திரம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆர்யா, இதில் காட்டுவாசியாக வருகிறாராம். இவர் காடுகளில் சென்று தேன் எடுப்பவராக நடிக்கிறாராம். இவரது கதாபாத்திரம் கடவுள் அனுமனை மனதில் வைத்து உருவாக்கியிருக்கிறார்களாம். இதற்காக ஆர்யா ஒரு காட்டுவாசிக்குண்டான கட்டுமஸ்தான உடலுக்கு தன்னை தயார்படுத்தி வருகிறாராம்.

இப்படத்தின் படப்பிடிப்பு கேரளா மற்றும் பாங்காக் காடுகளில் படமாக்கவிருக்கின்றனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries