ராஜதந்திரம் படக்குழுவுக்கு புத்துணர்ச்சி கொடுத்த சிம்பு

Simbu @ Rajathandhiram Preview Show Stills

செந்தில் வீராச்சாமி, ரெஜினா கஸாண்ட்ரா நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த வெற்றி பெற்ற படம் ‘ராஜதந்திரம்’. மூன்று தந்திரக்கார இளைஞர்கள் நகைக்கடையை எந்த மாதிரியான ராஜதந்திரத்தோடு களவாடுகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் மையக்கரு.

அமித் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை செந்தில் வீராச்சாமியே தயாரித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க செந்தில் வீராச்சாமி ஆர்வமானார்.

அதன்படி, இரண்டாம் பாகத்திற்கு இவரே இயக்குனராகவும் மாறியுள்ளார். இந்த படத்தின் ஒரு சில காட்சிகளை ஏற்கெனவே படமாக்கிவிட்ட நிலையில், மீதி உள்ள காட்சிகளை வரும் ஜூன் மாதத்தில் இருந்து எடுக்கவுள்ளனர்.

தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத புதிய முயற்சியாக இப்படத்தின் முதல் 6 நிமிட காட்சிகளை மட்டும் வருகிற மார்ச் 13-ந் தேதி வெளியிடவிருக்கிறார்கள். படத்தில் இந்த 6 நிமிட காட்சிகள் மிகவும் முக்கியமானதாக இருக்குமாம். அதனால், இந்த 6 நிமிட காட்சியை மட்டும் முதலில் வெளியிடவிருக்கிறார்கள்.

‘ராஜதந்திரம்’ முதல் பாகத்தின் விளம்பரங்களையே இந்த படக்குழு மிகவும் வித்தியாசமாக செய்தனர். அந்த படத்தின் ஒவ்வொரு டீசரையும் ஒவ்வொரு நட்சத்திரங்களை வைத்து வெளியிட்டு, படத்திற்கு மிகவும் பிரம்மாண்டம் காட்டினர்.

அதேபோல் இந்த படத்திற்கும் ஏதாவதும் வித்தியாசமான முயற்சியை மேற்கொள்ள படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மார்ச் 13-ந் தேதி வெளியாகவிருக்கும் ‘ராஜதந்திரம்-2’ படத்தின் 6 நிமிட காட்சியை சமீபத்தில் நடிகர் சிம்புவுக்கு இப்படத்தின் இயக்குனர் செந்தில் போட்டுக் காண்பித்துள்ளார்.

அந்த காட்சிகளை பார்த்த சிம்பு படக்குழுவினரை மிகவும் பாராட்டியுள்ளார். இது படக்குழுவினருக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online