மிஷ்கின் மூலம் துப்பறிவாளன் ஆகும் விஷால்

vishal-myshkin-400x255விஷால் தற்போது ‘மருது’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தை ‘குட்டிப்புலி’ முத்தையா இயக்கி வருகிறார். இப்படத்தை தொடர்ந்து விஷால் மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு தற்போது வெளியாகியுள்ளது.

மிஷ்கின் இயக்கும் அந்த புதிய படத்திற்கு ‘துப்பறிவாளன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படம் சஸ்பென்ஸ், திரில்லர், ஆக்ஷன் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்தை விஷால் தனது சொந்த பேனரில் தயாரிக்கிறார்.

மிஷ்கின் தற்போது ‘சவரக்கத்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விஷாலும் ‘மருது’ படத்தில் பிசியாக இருப்பதால் இருவரும் தங்கள் படங்களை முடித்துக்கொண்டு புதிய படத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில், இப்படம் குறித்து மேலும் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என நம்பலாம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online