அட்லி தயாரிக்கும் படத்தின் தலைப்பு வெளியானது

85293_thumb_665‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அட்லி. இவர் இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றியவர். இப்படத்தின் வெற்றி இவருக்கு விஜய்யை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது.

அதன்படி, தற்போது விஜய்யை வைத்து ‘தெறி’ படத்தை இயக்கி வருகிறார். தமிழ் சினிமாவில் இயக்குனர்கள், நடிகர்கள் எல்லாம் தயாரிப்பாளர்களாக மாறி வரும் சூழ்நிலையும், அட்லிக்கும் படத்தை தயாரிக்கும் ஆசை துளிர்விடவே, ‘ஏ பார் ஆப்பிள் எண்டர்டெயின்மெண்ட்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.

இவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தில் ஜீவா நடிக்க ஒப்பந்தமானார். மேலும், அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யாவும், சூரி, இளவரசு ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். இப்படத்தை அட்லியிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஐசக் என்பவர் இயக்கவுள்ளார்.

இந்நிலையில், இப்படத்திற்கான தலைப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ‘சங்கலி பங்கிலி கதவத் தொற’ என்று வித்தியாசமான தலைப்பு வைத்துள்ளனர். இந்த தலைப்பு ‘காஞ்சனா’ படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் இடம்பெற்றுள்ளது. அந்த பாடல் வரியையே படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries