குண்டாகி விட்டதாக வதந்தி பரப்புகிறார்கள்: அஞ்சலி

17அஞ்சலி மீண்டும் தமிழ் படங்களில் ‘பிசி’ ஆகி இருக்கிறார். தமிழில் 3 படங்களிலும், தெலுங்கில் 3 படங்களிலும் நடித்து வருகிறார். இது பற்றி அஞ்சலியிடம் கேட்டபோது…

நான் நடிக்கும் படம் எல்லோராலும் பேசப்படும் படமாக இருக்க வேண்டும். எனக்கும் முக்கியத்துவம் உள்ள வேடமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட படத்தைதான் நான் தேர்ந்து எடுத்து நடிக்கிறேன். குடும்பப் பாங்கான பெண்ணா நடிப்பதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம்.

நான் நடிக்க வந்ததில் எப்படி இருந்தேனோ, அப்படித்தான் இப்போதும் இருக்கிறேன். யாரைப் பற்றியும் பொறாமைப் பட மாட்டேன். எதையும் வெளிப் படையாக பேசி விடுவேன். டைக்டர் சொல்வதை மட்டும் செய்வேன். தேவை இல்லாத விஷயங்களில் தலையிடமாட்டேன்.

நான் குண்டாகி விட்டதாக வதந்தியை பரப்பி வருகிறார்கள். படத்துக்கு எப்படி தேவையோ அந்த அளவில் எனது உடல் அமைப்பு இருக்கிறது. ‘இறைவி’ படத்தில் நடிப்பதற்கு ஒல்லியாக இருக்க வேண்டும் என்றார்கள். அதற்காக கஷ்டப்பட்டு எனது எடையில் 7 கிலோ குறைத்தேன்.

யாருக்கும் நான் போட்டியில்லை. எனக்கு வரும் வாய்ப்பையும் யாரும் தட்டிப்பறிக்க முடியாது. எனக்கு வரவேண்டிய படம் நிச்சயம் என்னிடம் வரும்.

இப்போது நான் அம்மா, அப்பா, அண்ணனுடன் ஐதராபாத்தில் வசிக்கிறேன். இப்போது நான், எனது குடும்பம், சினிமா இவ்வளவு தான் என் உலகம் என்றார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries