விவசாயி பாலன் கடனை அடைக்க முன் வந்த விஷா

tutucroppedதஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அருகே உள்ள சோழகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பாலன்(50). கடந்த 2011-ல் தஞ்சையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.3.80 லட்சம் கடன் பெற்று, டிராக்டர் வாங்கியுள்ளார். கடைசி 2 தவணைகள் செலுத்தாமல் இருந்திருக்கிறார்.

இதற்கு கால அவகாசம் கேட்டுள்ள நிலையில், கடந்த 4-ம் தேதி அறுவடையில் பாலன் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த காவல் நிலைய ஆய்வாளர் குமாரசாமி மற்றும் நிதி நிறுவன ஊழியர்கள், டிராக்டரில் இருந்து பாலனை கீழே தள்ளி, சரமாரியாக அடித்துள்ளனர்.

பாலனை போலீசார் தாக்கிய வீடியோ சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதனை பலரும் கண்டித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இதை பார்த்த விஷால் பாலனின் கடனை தான் அடைப்பதாக கூறியிருக்கிறார்.

இது குறித்து விஷால் சமூக வலைதளத்தில் கூறும்போது, “பாலன் உங்களை எனக்கு தெரியாது. ஆனால் நீங்கள் ஒரு விவசாயி என்ற அடிப்படையில் உங்களுக்கு உறுதுணையாக இருக்க விரும்புகிறேன்.

எனக்கு உங்களுடைய கடன் தவணைத் தொகை எவ்வளவு என்று தெரியாது. ஆனால், என்னுடைய உறுதுணையை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுடைய கடனை நான் அடைக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries