சவாலான எந்த வேடத்திலும் நடிப்பேன்: ராஜ் பரத்

raj-bharath-wants-to-direct-a-film-21சிவாஜியின் ‘சவாலே சமாளி’ உள்பட பிரபல நடிகர்கள் நடித்த படங்களை இயக்கிய பழம் பெரும் இயக்குனர் மல்லியம் ராஜகோபால். இவருடைய மகன் ராஜ்பரத்.

‘555’ ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படங்களில் வில்லனாக நடித்த இவர், ‘நட்பதிகாரம்–79’ படத்தில் ஹீரோ ஆகி இருக்கிறார். கண்ணெதிரே தோன்றினாள்’ படத்தை இயக்கிய ரவிச்சந்திரன் இயக்கத்தில் இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி கேட்ட போது….

‘நட்பதிகாரம்’ படத்தின் கதையை ரவிச்சந்திரன் எழுதும் போதே நானும் அவருடன் இருந்தேன். ஒரு உதவி இயக்குகராகவே அவருடன் இருந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. நானே கதாநாயகனாகவும் நடித்தேன்.

இதனால் பாத்திரத்தை நன்றாக புரிந்து நடிக்க முடிந்தது. உணச்சிமயமான எனது பாத்திரம் சவாலானது. ஏற்கனவே கதை பற்றி நன்றாக தெரிந்து வைத்திருந்தால் அதை சரியாக செய்யமுடிந்தது.

இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு சண்டை காட்சியில் நடித்த போது உண்மையான கத்தியை பயன்படுத்த வேண்டியது வந்தது. ஸ்டண்ட் நடிகர் கத்தியை என்மீது வீசிய போது அது கழுத்தை பதம் பார்த்தது. ரத்தமும் கசிந்தது.

நல்ல வேளையாக லேசாக நான் விலகியதால் சிறிய காயத்துடன் தப்பித்தேன். அதை இப்போது நினைத்தாலும் பயமாக இருக்கிறது.

நட்பதிகாரம் அனைவருக்கும் பிடித்தமான படமாக உருவாகி இருக்கிறது. சசி இயக்கத்தில் ‘555’ , மிஷ்கின் இயக்கத்தில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படங்களில் நடித்த போது பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்.

இந்த படத்தில் அனைவரும் சுந்திரமாக நடித்திருக்கிறோம். திரை உலகில் எனது அப்பாவுக்கு நிறைய மரியாதை இருக்கிறது. அதை காப்பாற்றும் வகையில் செயல்படுவேன்.

அடுத்து ‘ஆந்திராமெஸ்’, ‘சிகை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். ஒரே மாதிரியாக இல்லாமல் வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது விரும்பம். ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டேன். நல்ல வேடங்கள் கிடைத்தால் சவாலான எந்த பாத்திரத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன்’ என்றார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online