சூர்யாவின் 24 படத்தின் சிங்கிள் டிராக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

suriya-24-759சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘24’. இப்படத்தை ‘யாவரும் நலம்’ , தெலுங்கில் ‘மனம்’ படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இப்படத்தின் சிங்கிள் டிராக் ஒன்றை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்த பாடல் வரும் திங்கட்கிழமை அன்று காலை 11 மணிக்கு இணையதளத்தில் வெளியிட இருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த பாடல் வரிகளை தேசிய விருதுகள் பெற்ற கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். பென்னி தயால் பாடியுள்ளார்.

சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சமந்தா மற்றும் நித்யாமேனன் ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries