குத்துப்பாடல்களில் ஆபாசம்: கதாநாயகிகள் மீது ஷபனா ஆஸ்மி பாய்ச்சல்

shabana-azmiபிரபல இந்தி நடிகை ஷபனா ஆஸ்மி. இவர் 1980 மற்றும் 90-களில் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். ஐந்து தடவை சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றுள்ளார். தற்போது சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறார். திரைப்படங்களில் ஆபாசம் தூக்கலாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

இதுகுறித்து ஷபனா ஆஸ்மி அளித்த பேட்டி வருமாறு:-

‘‘சினிமாவில் ஆபாசம் அதிகரித்து விட்டது. பாடல் காட்சிகள் மோசமாக இருக்கின்றன. குத்துப்பாடல்களில் நடிகைகள் எல்லைமீறி ஆபாசம் காட்டுகிறார்கள்.

செக்ஸ், ஆபாசம் இரண்டுக்கும் இடையில் மெல்லிய கோடுதான் இருக்கிறது. இதை படம் எடுக்கும் டைரக்டர்களும், தயாரிப்பாளர்களும் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் இதனை தற்போது மறந்து இருப்பதால்தான் கதாநாயகிகள் கவர்ச்சி காட்சிகளில் எல்லை மீறுகிறார்கள்.

சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன். அந்த படத்தில் முன்னணி கதாநாயகி ஒருவர் நடித்து இருந்தார். அவர் குத்துப்பாடல் காட்சியொன்றில் ஆபாசமாக நடனம் ஆடினார்.

‘நான் ஒரு தந்தூரி சிக்கன். நீ ஆல்ஹகாலை குடிக்கிறியே என்னையும் கடித்து தின்னு’ என்று பாட்டுப்பாடி நடனம் ஆடி இருந்தார். இது சிரிக்க வேண்டிய விஷயம் அல்ல. சீரியஸாக சிந்திக்க வேண்டிய விஷயம்.

வீடுகளில் குழந்தைகள் அந்த பாடலுக்கு அர்த்தம் கேட்கிறார்கள். அவர்களிடம் என்ன சொல்ல முடியும். கல்லூரி, பள்ளிகளிலும் இதுபோன்ற ஆபாச பாடல்களை போட்டு மாணவர்களை நடனம் ஆடவைக்கிறார்கள்.

இப்படி செய்வதன் மூலம் மாணவ சமுதாயத்தை பாழ்படுத்துகிறோம். குழந்தைகளிடம் இதுபோன்ற பாடல்கள் மூலம் ஆபாசத்தை திணிப்பதற்கு நடிகைகள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்’’.

இவ்வாறு ஷபனா ஆஸ்மி கூறினார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries