சோகத்திலும் தேர்வு எழுத சென்ற கலாபவன்மணி மகளுக்கு குஷ்பு பாராட்டு

Sreelakshmi.jpg.image.784.410.jpg.image.784.410பிரபல மலையாள நடிகர் கலாபவன்மணி கடந்த வாரம் திடீரென மரணம் அடைந்தார். அவரது குடும்பத்தினர் இன்னும் சோகத்தில் இருந்து மீளவில்லை.

கலாபவன்மணி, அவரது மகள் ஸ்ரீலெட்சுமி மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார். ஸ்ரீலெட்சுமி எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். தந்தை இறந்த சில நாட்களில் அவருக்கு பள்ளி இறுதி தேர்வு நடந்தது. சோகத்தை மறைத்துக் கொண்டு ஸ்ரீலெட்சுமி தேர்வு எழுதச் சென்றார்.

அங்கு தோழிகள் அவருக்கு ஆறுதல் கூறினர். அப்போது ஸ்ரீலெட்சுமி கதறி அழுதார். இந்த காட்சிகள் ஊடகங்களில் வெளியானது. தந்தை இறந்த சோகத்தை மறைத்துக் கொண்டு தேர்வு எழுதச் சென்ற ஸ்ரீலெட்சுமியை பலரும் பாராட்டினர்.

நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்புவும், கலாபவன்மணியின் மகளை பாராட்டி கருத்து தெரிவித்தார்.

இது அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியானது. தந்தை இறந்த சோகம் மறையும் முன்பு அதை மனதில் பூட்டி வைத்து தேர்வு எழுதச் சென்ற ஸ்ரீலெட்சுமியை பாராட்டுவதாக குஷ்பு டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online