இளையராஜாவின் இசைக்கேற்ப ஓவியம் வரைந்த ஓவியர்கள்

ilayaraja1இந்தியாவிலேயே முதன் முறையாக 1000 படங்களுக்கு இசையமைத்த இசைஞானி இளையராஜாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 100 ஓவியர்கள் இணைந்து வரையும் இசையோவியம் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், நாசர், பொன்வண்ணன், இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நடிகர் விஜய் சேதுபதி வர்ணத்தை எடுத்து கொடுத்து விழாவை தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் இசைஞானி இளையராஜாவின் இசைக்கு ஏற்றவாறு ஓவியர்கள் அனைவரும் ஓவியம் வரைந்தார்கள். இயக்குனர் பா.ரஞ்சித் அவருடைய மனைவி மற்றும் மகள் ஆகியோர் கலந்து கொண்டு ஓவியம் வரைந்தது இந்நிகழ்ச்சியின் தனிச் சிறப்பாக அமைந்தது.

இவ்விழா நாளையும் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வின் தொடர்ச்சியாக இந்த ஓவியங்கள் அனைத்தும் விரைவில் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன. இதற்கு அடுத்தகட்டமாக இந்த ஓவியங்கள் அனைத்தும் புத்தகமாக வெளியிடப்படவுள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries