விஜய்யுடன் மோதும் ரஜினி பட வில்லன்

Vijay1விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தெறி’. அட்லி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமிஜாக்சன் நடித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 20ம் தேதி நடைபெற இருக்கிறது. ஏப்ரல் மாதம் படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் விஜய் அடுத்ததாக பரதன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார். இந்த தகவல்கள் ஏற்கனவே வெளிவந்த நிலையில், தற்போது இப்படத்தில் வில்லனாக ஜெகபதிபாபு நடிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

பிரபல தெலுங்கு நடிகரான ஜெகபதி பாபு, ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். ரஜினியுடன் மோதிய ஜெகபதி பாபு புதிய படத்தின் மூலம் விஜய்யுடன் மோத இருக்கிறார்.

இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries