தர்மதுரையால் ராதிகா சரத்குமாருக்கும், விஜய் சேதுபதிக்கும் தேசிய விருது கிடைக்குமா?

xl8aNScவிஜய் சேதுபதி – தமன்னா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘தர்மதுரை’. இப்படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார். இப்படத்தில் ராதிகா சரத்குமார், சிருஷ்டி டாங்கே உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் எடிட்டிங் பணியை காசி விஸ்வாதன் மேற்கொண்டு வருகிறார். இப்படத்தின் காட்சிகளை பார்த்த அவர், ராதிகா சரத்குமாருக்கும், விஜய் சேதுபதிக்கும் இப்படம் தேசிய விருதை பெற்றுக் கொடுக்கும் என தெரிவித்துள்ளார். இந்த செய்தியை இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இப்படம் இந்த ஆண்டு வெளிவர இருக்கிறது. இப்படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்துவே எழுதியுள்ளார். விரைவில் பாடல்கள் வெளிவரும் என நம்பப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries