ராஜதந்திரத்தில் இளையராஜா

illayaraja-story_647_081615014704வீரா, ரெஜினா, சிவா, அஜய் பிரசாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் அமித் இயக்கத்தில் வெளியான படம் ‘ராஜதந்திரம்’. செந்தில் வீராசாமி தயாரித்த இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் விநியோகம் செய்தது.

கடந்த ஆண்டு வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சுமாரான வெற்றியை பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

முதல் பாகத்தில் தயாரிப்பாளரான செந்தில் வீராசாமி இரண்டாம் பாகத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். முதல் படத்திலேயே படங்களின் பாடல்களாகட்டும், போஸ்டர்கள் ஆகட்டும் வித்தியாசமான யுக்திகளை கையாண்ட இப்படக்குழு, தற்போது இரண்டாம் பாகத்திலும் புதிய யுக்தியை கையாளவிருக்கின்றனர்.

அதன்படி, இதுவரை தமிழ் சினிமா எடுக்காத புதுமுயற்சியாக படத்தின் முதல் 6 நிமிட காட்சிகளை மட்டும் இணையதளத்தில் வெளியிடவிருக்கிறார்கள். இது இன்று மாலை 6 மணியளவில் வெளியாகிறது.

கூடுதல் விஷயம் என்னவென்றால், இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளாராம். இதுநாள் வரை இளையராஜாதான் இப்படத்தின் இசையமைப்பாளர் என்ற செய்தியை ரகசியமாக வைத்திருந்த படக்குழு இப்பொழுதுதான் வெளியிட்டு இருக்கிறார்கள்.

இளையராஜாவின் இசை படத்திற்கு மேலும் பலமாக இருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக, இப்படத்தின் 6 நிமிட காட்சியை சிம்பு பார்த்து ரசித்து, படக்குழுவினரை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries