ஒரு வழியாக திரைக்கு வருகிறது வாலிப ராஜா

Vaaliba-Raja-2015-Tamil-Full-Movie-Watch-Online-DVDScr‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் வெற்றிக்குப்பிறகு அந்த படத்தில் நடித்த சேது, விசாகா, சந்தானம் ஆகியோர் மீண்டும் ஒன்றாக சேர்ந்து நடிக்கும் படம் ‘வாலிப ராஜா’. இப்படத்தில் சந்தானம் மனநல மருத்துவராகவும், சேது டிசைனராகவும், விசாகா மனநல மருத்துவம் படிக்கும் மாணவியாகவும் வருகிறார்.

இப்படத்தில் இவர்களோடு ஜெயப்பிரகாஷ், விடிவி கணேஷ், தேவதர்ஷினி, சந்தான பாரதி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமும் நடித்துள்ளது. மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகை நுஸ்ரத் என்பவரும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாய் கோகுல் ராம்நாத். இவர் கே.வி.ஆனந்திடம் உதவியாளராக இருந்தவர். இப்படத்தை வாங்ஸ் விஷன் ஒன் என்ற படநிறுவனம் தயாரித்திருக்கிறது.

முழுநீள காமெடி பொழுதுபோக்கு படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ரதன் இசையமைத்திருக்கிறார். இப்படம் முடிந்து ஒரு வருடத்திற்கு மேலாகிறது.

கடந்த வருடமே இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சில காரணங்களால் இப்படம் வெளியாகவில்லை. இந்நிலையில் மார்ச் 25ம் தேதி கண்டிப்பாக திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries