தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடிப்பேன்: சிருஷ்டி டாங்கே

Shrusti Dange Latest Photoshoot Album-1‘கத்துக்குட்டி’, ‘வில்அம்பு’, ‘நவரச திலகம்’ படங்களில் நடித்தவர் சிருஷ்டி டாங்கே. தமிழ் திரை உலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தை உருவாக்கி வருகிறார். அடுத்து ‘தர்மதுரை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தனது தமிழ் திரை உலக அனுபவம் பற்றி சிருஷ்டி டாங்கே கூறும்போது, ‘‘தர்மதுரை படத்தில் நான் கல்லூரி மாணவியாகவும், டாக்டர் ஆகவும் நடிக்கிறேன். இது எனக்கு ஒரு நல்ல படமாக அமையும் என்று நம்புகிறேன். இதில் பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தில் எனக்கும் ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ள இயக்குனர் சீனு ராமசாமிக்கு நன்றி.

தற்போது என் கைவசம் 5 படங்கள் உள்ளன. அடுத்து வசந்த் விஜய்யுடன் நடிக்கும் ‘அச்சமின்றி’ படம் வெளியாக இருக்கிறது.

இது எல்லாவிதமான சிறப்பு அம்சங்களையும் கொண்ட ‘கமர்சியல்’ படம். இதில் நான் முழுமையான சென்னை பெண்ணாக நடித்திருக்கிறேன். இது கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாகவும் இருக்கும்.

தமிழ்பட உலகில் முக்கிய இடம் பிடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்து, ‘ஒரு நொடியில்’, ‘காலகூத்து’, ‘ஜித்தன்–2’ படங்களில் நடிக்கிறேன். இதில் ‘ஜித்தன்–2’ படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online