சூர்யாவின் 24 பாடல் எப்படி?

Suriyas-24-2சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘24’ படம் வருகிற ஏப்ரல் மாதத்தில் வெளியாகவுள்ளது. விக்ரம் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் சமந்தா, நித்யாமேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் சூர்யா மூன்றுவிதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டைம் டிராவல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் வைரமுத்து வரிகளில் உருவாகியுள்ள ‘காலம் என் காதலியோ’ என்ற சிங்கிள் பாடல் இன்று அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

ஈராஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே இப்பாடல் இடம்பெற்றுள்ளது. காலத்தின் தந்தை என போற்றப்படும் ஐன்ஸ்டினின் 137-வது பிறந்ததினமான இன்று, காலத்தை அடிப்படையாக கொண்டு உருவான ‘24’ படத்தின் சிங்கிள் பாடலை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் வெஸ்டர்ன் பாணியில் இசையமைத்துள்ளார். ‘மாயம் இல்லை.. மந்திரம் இல்லை.. ஜாலம் இல்லை… தந்திரம் இல்லை… காலம் என் காதலியோ, கண் காணா மோகினியோ… ஐன்ஸ்டினை மாற்ற வந்த ஆனந்த பேரொளியோ…’ என்று தொடங்கும் இந்த பாடலில் இடம்பெற்றுள்ள வைரமுத்து வரிகள் ஒவ்வொன்றும் மிகவும் அழகாக இருக்கிறது.

பென்னி தயாளின் குரல் இந்த பாடலுக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது. ஏ.ஆர்.ரகுமானின் இசை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு ரசிக்க வைக்கிறது. இந்த பாடலை ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள். ஈராஸ் நிறுவனம் இப்பாடல் உரிமையை பெற்றுள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online