பேயாக நடிக்கும் ராதாரவி

Radha Ravi in Jil Jung Juk Movie Stills

Radha Ravi in Jil Jung Juk Movie Stills

ராதாரவி நடிப்பில் சமீபகாலமாக வித்தியாசமான வேடங்கள் ஏற்று திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். ‘ஜில் ஜங் ஜக்’ படத்தில் வித்தியாசமான வில்லனாக வந்து அனைவரையும் கவர்ந்தார். அதேபோல், சமீபத்தில் வெளிவந்த ‘மாப்ள சிங்கம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றார்.

இந்நிலையில், தற்போது விஷாலுடன் இணைந்து ‘மருது’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதேநேரத்தில் ஜீவா நடிக்கும் திகில் படமான ‘சங்கிலி பங்கிலி கதவத் தொற’ படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தில் ராதாரவி பேயாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனையோ கதாபாத்திரங்கள் ஏற்று நடித்த ராதாரவி பேயாக நடிப்பது இதுவே முதல் முறை.

இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, சூரி ஆகியோரும் நடிக்கின்றனர். கமலின் உதவியாளர் ஹரி என்பவர் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை அட்லி தனது சொந்த பேனரில் தயாரிக்கிறார். இவர் தயாரிக்கும் முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online