சின்னத்திரை நடிகர் சாய்பிரசாந்த் விஷம் குடித்து தற்கொலை

sai-prashanth-suicide-14-1457929951சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர் சாய்பிரசாந்த் (வயது 30). இவர் நேரம், தெகிடி, வடகறி உள்ளிட்ட சில தமிழ் சினிமா படங்களில் துணை நடிகராக நடித்தவர். மேலும் அவர் இளவரசி, செல்வி, அண்ணாமலை உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

நேற்று சின்னத்திரையின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா சென்னை சாலி கிராமத்தில் நடந்தது. இந்த விழாவுக்கு அவர் வரவில்லை.

இந்த நிலையில் குடும்பத்தகராறு காரணமாக சாய்பிரசாந்த் நேற்று வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர் கடந்த வருடம் காதல் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online