ஆன்மீகத்தை புரிந்து கொள்ள ரஜினி எனக்கு உதவி செய்தார்: தன்ஷிகா

tamil-actress-actress-dhansika-latest-pics15ரஜினியின் ‘கபாலி’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் தன்ஷிகா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் இவர் ரஜினி மகளாகவும் பெண் தாதாவாகவும் வருகிறார். இதற்காக தனது நீண்ட தலைமுடியை தியாகம் செய்து கிராப்வெட்டிக் கொண்டார்.

ரஜினியுடன் நடிப்பது தனக்கு கிடைத்த கவுரவம் என்று கூறி வந்த தன்ஷிகா, இப்போது ரஜினியுடன் பேசிப் பழக வாய்ப்பு கிடைத்தது பற்றி பெருமையாக கூறுகிறார். இந்த அனுபவம் குறித்து அவரிடம் கேட்டபோது….

‘‘‘கபாலி’ படப்பிடிப்பின் போது ரஜினி சாருடன் பேச வாய்ப்பு கிடைத்தது. எனக்கு ஆன்மீகத்தில் நிறைய ஈடுபாடு உண்டு. எனவே ஆன்மீகம் பற்றி நிறையபேசுவேன்.

அவர் ஆன்மீகத்தில் அனுபவமும், ஞானமும், தெளிவும் கொண்டவர். எனவே ஆன்மீக விஷயங்களில் எனக்கு உள்ள சந்தேகங்களை அவரிடம் கேட்டு தெளிவு பெற்றேன். எனது ஆன்மீக குருவாக அவரைத்தான் கருதுகிறேன்’’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online