நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து சரத்குமார் தற்காலிக நீக்கம்

pkpmhvejhfbjcநடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார், நடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டு புதிதாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட பின்னர் முன்னாள் நிர்வாகிகள் சங்கத்தின் வரவு-செலவு கணக்கை முழுமையாக தாக்கல் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினர்.

மேலும், முந்தைய தலைவர் சரத்குமார் மீது நடிகர் சங்கம் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. அதில், சரத்குமார் நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது, சங்கத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது என்று புகார் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள முந்தைய நிர்வாகிகள் மீதான நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர், முன்னாள் தலைவர் சரத்குமார், ராதா ரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரை சங்கத்தின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும், அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை அவர்களின் இடைநீக்கம் தொடரும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries