தனுஷ் படத்தில் ராணா டகுபதி

Rana-Daggubati-Biographyதமிழ், தெலுங்கில் வெளிவந்த ‘பாகுபலி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராணா டகுபதி. இப்படத்தை தொடர்ந்து நிறைய தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். அந்த வரிசையில், ‘ருத்ரமாதேவி’, ‘பெங்களூர் நாட்கள்’ உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கும் ‘எனைநோக்கி பாயும் தோட்டா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ராணா டகுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது ராணா டகுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் கவுதம் மேனன்.

இப்படத்தின் கதாநாயகியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். ரொமான்டிக் திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்று வருகிறது.

சென்னையில் படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை மும்பையில் நடத்தவுள்ளனர். இப்படத்தை கவுதம்மேனன் ஒன்றாக எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online