தெறி ஆடியோ வெளியீடு புதிய அப்டேட்…

imgvijay-theriவிஜய் நடிப்பில் அட்லி இயக்கியுள்ள ‘தெறி’ படத்தின் ஆடியோ வருகிற மார்ச். 20-ந் தேதி நடைபெறவிருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. சமீபகாலமாக விஜய் நடித்த படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவை நட்சத்திர ஓட்டல்களில் பெரிய விழாவாக எடுத்துக் கொண்டாடினர்.

கடைசியாக விஜய் நடிப்பில் வெளிவந்த ‘புலி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மகாபலிபுரம் அருகில் உள்ள மிகப்பெரிய ஓட்டலில் நடத்தினர். அதேபோல், ‘தெறி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவையும் பெரிய நட்சத்திர ஓட்டலில் நடத்துவார்கள் என்று எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், கலைவாணர் அரங்கத்தில் இந்த விழா நடக்கப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது.

ஆனால், தற்போது இப்படத்தின் ஆடியோ வெளியீட்டை சத்யம் திரையரங்கில் மிகவும் எளிமையான விழாவாக நடத்த முடிவு செய்துள்ளார்களாம். அதன்படி, இந்த ஆடியோ வெளியீட்டு விழா வருகிற மார்ச் 20-ந் தேதி சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள சத்யம் திரையரங்கில் மாலை வேளையில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதில் விஜய் உள்ளிட்ட ‘தெறி’ படக்குழுவினர் கலந்துகொள்ளவிருக்கின்றனர். மேலும், ஒருசில சினிமா நட்சத்திரங்களை மட்டும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆடியோ வெளியீட்டில் ரஜினி கலந்துகொள்வார் என்றும் கூறப்பட்டது. அந்த செய்தியை படக்குழுவினர் மறுத்துள்ளனர். ரஜினி ‘2.O’ படப்பிடிப்பில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால் இதில் கலந்துகொள்ள மாட்டார் என்று கூறியுள்ளனர். மேலும், விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் இந்த விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries