தெறி படத்தின் இசையை முடித்துவிட்ட ஜி.வி.பிரகாஷ்

G.-V.-Prakash-Kumarஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தெறி’ படம் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. இப்படத்தின் டப்பிங் பணிகள் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில், தற்போது இப்படத்தின் இசைப் பணிகள் அனைத்தையும் ஜி.வி.பிரகாஷ் முடித்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில், ‘தெறி’ படத்தில் டிஜிட்டல் டிராக் லிஸ்ட் அனைத்தையும் முடித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்களிடம் ஒப்படைத்துவிட்டதாக கூறியுள்ளார். இதன்மூலம் ஜி.வி.பிரகாஷ் ‘தெறி’ படத்துக்கான இசைப் பணி அனைத்தையும் முடிந்துவிட்டதாக தெரிகிறது.

இப்படத்தில் ‘தேனிசை தென்றல்’ தேவா, பாலச்சந்திரன், ஹரிஹரன், சைந்தவி, வைக்கம் விஜயலட்சுமி, விஜய், நீத்தி மோகன், ஜி.வி.பிரகாஷ், உத்ரா உன்னிக்கிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ, அருண் ராஜா காமராஜ், டி.ராஜேந்தர், சோனு கக்கார் ஆகியோர் பாடியுள்ளனர்.

இப்படத்தின் டீசரில் இடம்பெற்றிருந்த ஜி.வி.பிரகாஷின் இசை ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அந்த வரிசையில் இந்த படத்தின் பாடல்கள் மீதும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வருகிற மார்ச் 20-ந் தேதி இப்படத்தின் பாடல்களை வெளியிடவுள்ளனர். ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் படம் வெளிவருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online