ஹீரோவாக அவதாரம் எடுக்கும் கே.பாலச்சந்தரின் மகன்

balachander-759மறைந்த பழம்பெரும் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர், மற்றும் இயக்குனர் பாரதிராஜா இருவரும் இணைந்து நடித்து சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் ‘ரெட்டைச்சுழி’. இப்படத்தில் கே.பாலச்சந்திரின் மகனாக நடித்தவர் யுவராஜா.

இவர் தற்போது புதிய படம் ஒன்றில் ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார். ‘கெளுத்தி’ என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் நடிப்பதோடு மட்டுமில்லாமல், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கவும் செய்கிறார் யுவராஜ்.

இவருக்கு ஜோடியாக கன்னிகா என்பவர் நடிக்கிறார். இவர்களோடு கொங்கு ராஜா, கராத்தே ராஜா, ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். இப்படம் முழுக்க முழுக்க அழகிய கிராமத்து யதார்த்தங்களையும், அழகிய கிராமத்து காதலையும் சொல்லும் விதமாக உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு செல்வநம்பி என்பவர் இசையமைக்கிறார். அகரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.கே.ஸ்கொயர் பிலிம்ஸ் சார்பில் அக்ஷகன் இப்படத்தை தயாரிக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online