நயன்தாராவுக்கு நான் போட்டியில்லை: மடோனா செபஸ்டியன்

madonna-sebastian‘காதலும் கடந்து போகும்’ படத்தில் அறிமுகமாகி இருப்பவர் மடோனா செபஸ்டியன்

மலையாள வரவான இவருடைய யதார்த்தமான நடிப்பும், முக தோற்றமும் தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்த்து விட்டதாக கூறப்படுகிறது. மலையாள நடிகைகள் பலர் தமிழ் பட உலகை கலக்கி இருக்கிறார்கள்.

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த நயன்தாரா, இப்போது அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகியாக முதல் இடத்தில் இருக்கிறார்.

இப்போது தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் மடோனா, நடிப்பிலும் அழகிலும் நயன்தாராவுக்கு இணையாக இருக்கிறார். எனவே, இவர் தமிழ் பட உலகில் ஒரு ரவுண்டு வருவார். தென்னக திரை உலகை கலக்குவார் என்று பல்வேறு கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது.

இது குறித்து மடோனாவிடம் கேட்ட போது….

‘எனக்கென்று தனி ‘ஸ்டைல்’ இருக்கிறது. நல்ல இயக்குனரும், பொருத்தமான கதாபாத்திரமும் எனக்கு முக்கியம். நயன்தாராவுக்கு நான் போட்டியில்லை. மற்றவர்களாக அதை உருவாக்காமல் இருந்தால் சரிதான். நான் எனது பாணியில் பிடித்த பாத்திரங்களில் நடிப்பேன்’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries