மீண்டும் நாவலை மையப்படுத்தி படமெடுக்கும் வெற்றிமாறன்

Vetrimaaranவெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘விசாரணை’ படம் ‘லாக்கப்’ என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது. இப்படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுதல்களையும், பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்தது. விமர்சன ரீதியாகவும் பெரிய அளவில் பேசப்பட்டது.

இப்படத்தை தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறன் மேலும் ஒரு நாவலை தழுவி படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். கோட்டா நீலிமா எழுதிய ‘Shoes of the Dead’ என்ற நாவலை தழுவித்தான் இந்த படத்தை எடுக்கவிருக்கிறார்.

இந்த நாவல் இந்தியாவில் தொடரும் விவசாயிகளின் தற்கொலை பற்றியதாகும். இதுமாதிரியான கதை விஜய் நடித்த ‘கத்தி’ படத்தில் ஒரு பகுதியாக வரும். ஆனால், இந்த படம் முழுக்க முழுக்க விவசாயிகளை பற்றிய கதையாக இருக்கும் என கூறப்படுகிறது.

‘விசாரணை’ படத்திற்கு பிறகு வெற்றிமாறன் தனுஷை வைத்து ‘வடசென்னை’ படத்தைத்தான் இயக்குவதாக இருந்தது. ஆனால், தனுஷ் தொடர்ச்சியாக அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருவதால், ‘வடசென்னை’ படத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த படத்தை எடுக்க வெற்றிமாறன் முடிவு செய்துள்ளார்.

இப்படத்தை குறுகிய நாட்களில் முடிக்கவும் திட்டமிட்டுள்ளார். விரைவில் தொடங்கவும் முடிவு செய்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்திகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries