கோடை மழை – திரை விமர்சனம்

Kathiravanin-Kodai-Mazhai-Tamil-Movie-Starring-Mu.-kalangiyam-and-Sri-Priyankaநாயகன் கண்ணன் இராணுவத்தில் இருந்து விடுமுறைக்காக தனது சொந்த கிராமத்துக்கு வருகிறார். அவருக்கு அப்பா, அம்மா கிடையாது. பாட்டி மட்டுமே சொந்தம். இந்த கிராமத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் திருட்டுத் தொழிலேயே செய்து வருகிறார்கள்.

இவரது நண்பரான பொடுங்குவும் இந்த திருட்டு தொழிலேயே செய்து வருகிறார். ஆனால், நண்பரோ கண்ணனிடம் இதை மறைத்து வருகிறார்.

இந்நிலையில், அதேஊரில் இன்ஸ்பெக்டரான களஞ்சியத்தின் தங்கை நாயகி ஸ்ரீபிரியங்காவை பார்த்ததும் காதல் வயப்படுகிறார் கண்ணன். முதலில், இவரது காதலை ஏற்க மறுக்கும் நாயகி, பிறகு மெல்ல மெல்ல காதலிக்கத் தொடங்குகிறாள்.

மறுமுனையில், தனது நண்பன் பொடுங்கு திருட்டுத் தொழில் செய்துவருவது ஒருநாள் கண்ணனுக்கு தெரிய வருகிறது. இதனால், அவரை கண்டிப்பதோடு மட்டுமில்லாமல் நட்பையும் துண்டிக்கிறார் கண்ணன்.

அதேவேளையில், கண்ணணும், ஸ்ரீபிரியங்காவும் காதலிப்பது இன்ஸ்பெக்டர் களஞ்சியத்துக்கு தெரிய வருகிறது. முதலில் ஆத்திரப்படும் களஞ்சியம், பின்னர் சமாதானமாகி இருவருக்கும் திருமணம் செய்துமுடித்து வைக்க முடிவெடுக்கிறார்.

இந்நிலையில், கண்ணனின் அறிவுரையால் திருந்தி சொந்தமாக தொழில் செய்து வரும் பொடுங்குவை, திருட்டு பட்டம் கட்டி களஞ்சியம் இழுத்துச் செல்கிறார்.

அப்போது விசாரணையில் பொங்கு இறந்து விடுகிறான். தனது நண்பனின் சாவுக்கு காரணமான களஞ்சியத்தை ஆத்திரத்தில் சென்று அடித்து விடுகிறான் கண்ணன்.

இதனால், அவமானமடைந்த களஞ்சியம், தனது தங்கையை அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுக்கிறார். அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கிறார் களஞ்சியம்.

இறுதியில், கண்ணன்-ஸ்ரீபிரியங்கா காதல் திருமணத்தில் முடிந்ததா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

நாயகன் கண்ணன் புதுமுக ஹீரோதான் என்றாலும், அது தெரியாத அளவுக்கு நடிப்பை ஓரளவுக்கு கொடுத்திருக்கிறார்.

இவரிடம் இயக்குனர் நன்றாக வேலை வாங்கியிருக்கிறார் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. ஸ்ரீபிரியங்கா ஏற்கெனவே தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்திருக்கிறார். அதனால் இப்படத்திலும் ஓரளவுக்கு நன்றாக நடித்திருக்கிறார்.

படத்தில் தனி ஒரு ஆளாக நின்று காமெடியில் கலக்கியிருக்கிறார் இமான் அண்ணாச்சி. இவருக்கென்று தனி காமெடி டிராக். ஓரளவுக்கு ரசிக்கும்படி செய்திருக்கிறார். களஞ்சியம் இன்ஸ்பெக்டருக்குண்டான மிடுக்குடன் காட்சி தந்திருக்கிறார். நடிப்பிலும் ஓகே ரகம்தான்.

இயக்குனர் கதிரவன் தன்னால் முடிந்தளவுக்கு நேர்த்தியாக இந்த படத்தை எடுத்திருக்கிறார். படம் மிகவும் மெதுவாக நகர்வதுதான் சற்று போரடிக்கிறது. அதேபோல், படத்தில் சுவாரஸ்யம் இல்லாதது பெரிய பின்னடவே. கிளைமாக்சிலும் திருப்தியில்லை.

அதே நேரத்தில் கிராமத்து யதார்த்த மக்களின் வாழ்க்கை யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

சாம்பசிவத்தின் இசையில் வைரமுத்துவின் வரிகளில் அமைந்துள்ள பாடல்கள் அனைத்தும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.

பின்னணி இசையிலும் ஓகே ரகம்தான். ஜெய்யின் ஒளிப்பதிவும் காட்சிகளை அழகாக படமாக்கியிருக்கிறது. கிராமத்து அழகை இவரது கேமரா கண்கள் தெளிவாக காட்டியிருக்கிறது.

மொத்தத்தில் ‘கோடை மழை’ இதமானது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries