என்ன பிடிச்சிருக்கா – திரை விமர்சனம்

enna-pidichirukkaகிராமத்தில் அண்ணன், அண்ணி, தம்பி இவர்களுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் கெவின். இவருடைய அண்ணன் ஊரில் மிகவும் செல்வாக்குடன் இருக்கிறார். இதே ஊரில் சேர்மனாக இருப்பவர் ரவி மரியா. ஊரே தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்று கூறிக்கொண்டு அராஜகம் செய்து வரும் இவர், தன்னை எதிர்ப்பவர்களை தீர்த்துக் கட்டுகிறார்.

இந்நிலையில், அமெரிக்காவில் படித்து விட்டு கிராமத்துக்கு வருகிறார் நாயகி பிரீத்தி விஜா. இவருக்கும் கெவினுக்கும் முதல் சந்திப்பிலேயே காதல் ஏற்படுகிறது. இது தெரியவந்ததும், இரு குடும்பங்களுக்கும் பகை இருப்பதாக கூறி காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் சேர்மன் ரவி மரியாவிற்கும் கெவினின் சகோதரர்களுக்கும் மோதல் ஏற்படுகிறது.

இறுதியில் குடும்ப பகை தீர்ந்து கெவின், பிரீத்தி விஜா இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? சேர்மன் ரவி மரியாவுடன் ஏற்பட்ட பிரச்சனை தீர்ந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனுக்கு அதிக வசனம் பேசவோ, நடிப்பை வெளிப்படுத்தும் விதமான காட்சிகளோ இல்லை. இருந்தாலும் பாடல் காட்சிகளில் சிறப்பான நடனமும், ஆக்‌ஷன் காட்சிகளில் நல்ல திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகி பிரீத்தி விஜா, மண் மணம் மாறாமல் அழகாக நடித்திருக்கிறார். சேர்மனாக நடித்திருக்கும் ரவி மரியா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

கமர்ஷியல் படத்திற்குண்டான அனைத்து அம்சங்களையும் கொண்டு இயக்கியிருக்கிறார் இயக்குனர் சுப்புராஜ். சிறிய பட்ஜெட்டில் சிறப்பான படத்தை கொடுத்திருக்கிறார். ஆனால், வலுவான கதை இல்லாதது படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்ரீவித்யா கலை இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் விதத்தில் இருக்கிறது. பின்னணியில் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம். ராஜா ஒளிப்பதிவு படத்திற்கு ஓரளவு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘என்ன பிடிச்சிருக்கா’ கொஞ்சம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online