சிம்புவை வியப்படைய வைத்த அடா ஷர்மா

adah-sharma-simbu-759சிம்பு நடிப்பில் தற்போது வெளிவர காத்திருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. இதில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் ஆண்டிரியா நடித்துள்ளார்கள். பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு குறளரசன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டிய நிலையில் இருந்தது. இந்த பாடலுக்கு நடனம் ஆட நயன்தாரா மறுத்துவிட நிலையில், ஆண்ட்ரியாவை வைத்து படமாக்க படக்குழு திட்டமிட்டது.

ஆனால், அதுவும் கைவிடப்பட்டு பிரபல தெலுங்கு நடிகை அடா ஷர்மாவை இந்த பாடலில் நடனம் ஆட முடிவு செய்தனர். இப்பாடலின் படப்பிடிப்பு தொடர்ந்து நான்கு நாட்களாக சென்னையில் நடைபெற்றது. இதில் சிம்புவின் ஆட்டத்திற்கு ஈடு கொடுத்து ஆடியிருக்கிறார் அடா ஷர்மா. இவரின் ஆட்டத்தை பார்த்து சிம்பு வியந்து விட்டாராம்.

விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries